கல்முனை ஆதாரவைத்தியசாலையில் இரண்டுநாட்களில் 70லட்சருபா பெறுமதியான 140 கண் சத்திரசிகிச்சைகள் இலவசமாக நடைபெற்றது!

இலண்டன் தமிழ் வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் அனுசரைணயுடன் கல்முனை ஆதாரவைத்தியசாலையில் கடந்த இருநாட்களில்(25இ26) 70லட்சருபா பெறுமதியான 140 ஏழை கண்நோயாளர்களுக்கான கற்றரக்ட் சத்திரசிகிச்சைகள் முற்றிலும் இலவசமாக செய்துமுடிக்கப்பட்டிருக்கின்றன.

வைத்தியஅத்தியட்சகர்களான இரா.முரளீஸ்வரன் (கல்முனை), குண.சுகுணன் (களுவாஞ்சிக்குடி) ஆகியோரின் ஏற்பாட்டில்  லண்டனிலிருந்துவந்த ஈழத்து கண்வைத்தியநிபுணர்களான எம்.லோகேந்திரன்(வட்டுக்கோட்டை), ராதா தர்மரெட்னம் (களுவாஞ்சிக்குடி) ,காந்தாநிருஞ்சன் (மட்டக்களப்பு) ஆகியோருடன் கண்வைத்தியநிபுணர்களான எஸ்.சந்திரகுமார்(யாழ்ப்பாணம்), ஏ.பி.கங்கிலிபொல(கல்முனை) ,பி.டயஸ் (மொனராகல) உள்ளிட்ட 8 வைத்தியநிபுணர்கள் இச்சத்திரசிகிச்சைகளை 140 நபர்களுக்கு செய்தனர்.

மிக பின்தங்கியஇ யுத்தத்தின் பாதிப்பை அனுபவித்த பிரதேசத்திலிருந்து பதிவுசெய்யப்பட்ட 600 நோயாளர்களுக்கு களுவாஞ்சிக்குடி ஆதாரவைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டதுடன் அதில் 140 நோயாளர்களுக்கு 25,26 ம் தேதிகளில் கல்முனை ஆதாரவைத்தியசாலையில் இலவச கண் சத்திர சிகிச்சையானது கண் சத்திர சிகிச்சை கூடத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.

இதன்போது வைத்தியசாலை நிருவாகத்தால் வைத்திய நிபுணர் குழுவிற்கு அவர்களின் சேவையை பாராட்டி  பொன்னாடை போர்த்தி கௌரவிப்பு  வழங்கப்பட்டது
காரைதீவு ருபர் வி.ரி.சகாதேவராஜா

By admin