ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : இருபதாவது கிராண்ட்ஸ் ஸ்லாம்( grand slam title)பட்டத்தை வென்றார் ரோஜர் பெடரர் (Roger Federer )

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில், குரோசியா நாட்டு வீரர் மரின் சிலிச்சை 6-2, 6-7, 6-3, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைப் பெற்றார் ரோஜர் பெடரர்.

இது ரோஜர் பெடரரின் ஆறாவது ஆஸ்திரேலிய ஓபன் மற்றும் 20வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.

மெல்போர்னில் நடந்துவரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் பிரிவில் இன்று நடந்த இறுதி ஆட்டத்தில், ரோஜர் பெடரரும், மரின் சிலிச்சும் மோதினர்.

கிட்டதட்ட 3 மணி நேரம் நடந்த இந்த ஆட்டத்தில், ரோஜர் பெடரருக்கு, மரின் சிலிச் கடும் சவால் கொடுத்தார். ஆனால், இறுதியில் பெடரர் பட்டத்தை பெற்றார்.

ரோஜர் பெடரர், 20 அல்லது அதற்கு மேலாக கிராண்ட்ஸ்லாம் பட்டம் பெறும் நான்காவது வீரர் ஆவார்.