கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனையின் ஊடக அறிக்கை!

கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனை. 2016ம் ஆண்டிலிருந்து கல்முனை பிராந்திய இளைஞர்களை இணைத்து எவ்வித சுயலாப நோக்கமுமின்றி கல்முனை வாழ் தமிழ் மக்களின் எதிர்காலத்தை இலக்காக கொண்டு சமய,சாதி,எல்லை,பிரதேச வேறுபாடின்றி கல்முனை பிரதேச தமிழ் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காகவும் மருத்துவம்சட்டம் பொறியியல். தொழில்நுட்ப துறைகளில் கல்வி ரீதியாக முன்னேற்றவும், சுகாதாரம்,    பொருளாதாரம்,  சுய தொழில், கலாச்சார பண்பாடு. இருப்பு. எல்லை. காணி என்பவற்றை காக்கவும் கட்டியெழுப்பவும் ஒரே நோக்காக கொண்டு ஒட்டு மொத்த கல்முனை பிரதேச தமிழ் மக்களின் ஏகோபித்த குரலாக இருக்க வேண்டும் எனும் நோக்கோடு ஆரம்பிக்கபட்டது.

தமிழ் இளைஞர் சேனை கல்முனை பிராந்தியமானது தமிழ் மக்களின் கலாச்சார பண்பாட்டை பிரமாண்டமாக பிரதிபலிக்கும் முகமாக பொங்கல் விழாவை நடாத்தி மக்களின் மனம் வென்ற அமைப்பாக விளங்குகிறது. இவ் வெற்றியினை மேலும் வளர்த்து நிலைத்து இருக்க வேண்டும் என்பதால் அனைத்து இளைஞர்இயுவதிகளும் இவ் அமைப்பில் இணைந்து சேவையாற்றலாம்.இவ்வாறு நல்லெண்ணத்துடன் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்திலும் மற்றும் எமது அமைப்பின் ஊடக பேச்சாளர் திரு.கே.டனிஸ்கரன் வெளியிடும் அறிக்கைகள் மற்றும் செய்திகள் என்பவையே எமது அமைப்பின் உத்தியோகபூர்வமான அறிவிப்புக்களாகும் என்பதை அறியத்தருகின்றோம்.

அத்தோடு இவ் வேளையில் தலைவர். பொதுச்செயலாளர் ஆகியோர் இணைந்து விடும் அறிக்கைகள். செய்திகள் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்திலும். ஊடகங்கள் வாயிலாகவும் தலைவர். பொதுச்செயலாளர். ஊடக பேச்சாளர் மூலமாகவோ வழங்கினால் மாத்திரமே செல்லுபடியாகும்.இவ்வாறான விடயங்களுக்கு அப்பால் தலைவர். பொதுச்செயலாளர்.  ஊடக பேச்சாளர் மற்றும் எமது அமைப்பின் உறுப்பினர்கள் தங்களின் பிரத்தியேகமான முகநூல் பக்கத்தில் வெளியிடும் செய்திக்கு எமது அமைப்பு பொறுப்பாகாது என்பதோடு. எமது அமைப்பின் பெயரையும், உடமைகளையும் அல்லது அமைப்புக்கு சொந்தமான எதனையும் பயன்படுத்தினால் அவை மக்களால் நிராகரிக்கபட வேண்டும் என்பதோடு அவ்வாறு உத்தியோகபூர்வமற்ற செய்திகளை வெளியிடுவோருக்கு மற்றும் பயன்படுத்துவோருக்கு எதிராகவும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் தமிழ் இளைஞர் சேனை சட்டக் குழுவால் எடுக்கப்படும்.

மேலும் எமது சேவை தொடர அனைத்து இளைஞர்கள். யுவதிகள் இணையுமாறும் தாழ்மையுடன் விண்ணப்பிக்கின்றோம் என தமிழ் இளைஞர் சேனையின் தலைவர் திரு.தா.பிரதீபன் மற்றும் பொதுச்செயலாளர் திரு.அ.நிதான்சன் சேர்ந்து அறிக்கை விடுத்ததாக ஊடக பேச்சாளர் திரு.கே.டனிஸ்கரன் எமது ஊடகத்திற்கு தெரிவித்தார்.

தலைவர்

பொதுச்செயலாளர்

ஊடகப்பேச்சாளர்

By admin