தமிழ் அரசியல் கைதிகளின் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த நாட்களில் அனுராதபுரம் சிறைச்சாலையில் முன்னெடுத்துவரும் உண்ணாவிரத போராட்டத்திற்கு வழுச்சேர்க்கும் முகமாக நாளை 23 கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாச்சார பீடத்தின் ஏற்பாட்டில் கவண ஈர்ப்பு நடைபவணி காலை 08 மணிக்கு கிழக்குப்பல்கலைக்கழக முன்றலில் ஆரம்பமாகி செங்கலடி பதுளை சந்திவரை சென்று மீண்டும் பல்கலைக்கழகத்தை வந்தடையவுள்ளது.

இவ் எதிர்ப்பு நடவடிக்கைக்கு மாணவர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் ஆசிரிய சங்கங்கள் அரசியல் கைதிகளின் உறவினர்கள் சிவில் அமைப்புக்கள் அனைவரையும் ஒத்துழைப்பு வழங்குமாறு அழைக்கின்றனர். கிழக்குப்பல்கலைக்கழக கலை கலாச்சார பீட சங்கத்தின் செயலாளர் என். பவித்ராஜ்.

அதன் போது அரசாங்க அதிபர் காரியாலையத்திற்கு மகஜர் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published.