பாண்டிருப்பு நாவலர் வித்தியாலயத்தின் அதிபர் பைந்தமிழ்குமரன் ஜே.டேவிட் அவர்களின் “மண்மாதா” கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு கவிஞர் முகில்வண்ணன் தலைமையில் கல்முனை இராமகிருஸ்ண மிஷன் வித்தியாலயத்தின் கேட்போர்கூடத்தில் 2017.10.21 ஆம் திகதி நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கவீந்திரன் கோடீஸ்வரன் மற்றும் சிறப்பு அதிதியாக மாணவர் மீட்புப்பேரவைத் தலைவர் பொறியியலாளர் திரு.எஸ்.கணேஸ் அவர்களும் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்திருந்தனர்.

இந்நிகழ்வானது மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகி, இறைவணக்கம், வரவேற்பு நடனம், வரவேற்புரை, அதிதிகள் உரை, நூல் விமர்சனங்கள், வெளியீட்டுரை, ஏற்புரை மற்றும் நன்றியுரை என்று பல்வேறு சுவைமிகு உரைகள் பார்வையாளர்களுக்கு விருந்தாகியிருந்தது.

தொடர்ந்து வரவேற்புரையினை கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயல கலசார உத்தியோகத்தர் பிரபாகரன் அவர்கள் வழங்கஇ நூல் வெளியீட்டுரையினை கலாபூசணம்இவித்தகர்.எஸ்.அரசரெத்தினம் ஆற்றியிருந்தார்.  இதுதவிர நூல் தொடர்பான சிறப்புரைகள் மற்றும் ஆரோக்கிய விமர்சனங்களை சிற்ந்த தமிழில் சுவைபட எழுத்தாளர்.உமாவரதராஜன், ஆத்மராஜ், றூத்சந்திரிக்கா ஆகியோர் வழங்கியிருந்தனர்.

நிகழ்வில் நூலின் முதற்பிரதியை பைந்தமிழ்குமரன்.ஜே.டேவிட் அவர்களின்  தாயார் திருமதி.றோஸ்மேரி கிறகரி அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களிடமிருந்து பெற்றுகொண்டார். ஏனைய பிரதிகளை நூலாசியரிடமிருந்து வருகை தந்தோர் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

By admin

Leave a Reply

Your email address will not be published.