இசைஞானி இளையராஜாவுக்கு பத்மவிபூஷன் விருது : பிரபலங்கள் வாழ்த்து

குடியரசு தினத்தை முன்னிட்டு மத்திய அரசு பத்ம விருதுகளை அறிவித்துள்ளது. இதில் இசைஞானி இளையராஜாவுக்கு பத்மவிபூஷன் விருது கிடைத்துள்ளது.இந்த செய்தி அறிந்த திரையுலக பிரபலங்கள் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அதே சமயம் பிரபல ஆங்கிலப் பத்திரிகை ஓன்று இளையராஜா தலித் (தாழ்த்தப் பட்ட ) ஜாதியை சேர்ந்தவர் என்பதாலே இந்த விருது வழங்கப் பட்டது என்று தன நாளிதழில் செய்தி வெளியிட்டது பெரும் சர்ச்சையும் தமிழ் திரையுலகில் கண்டனத்தையும் ஏற்டபடுத்தியுள்ளது .

விருது பற்றி பார்த்திபன் வெளிட்ட பதிவு
ஒருவழியாக…
பத்மவிபூஷனுக்கு
இளையராசா கிடைத்த
மகிழ்ச்சியில் நாளை
மிட்டாய் வழங்கி
பூக்கள் தூவி
சிறகடித்து பறக்கிறது -நம்
தேசியக்கொடி 🇮🇳

எழுந்து நின்று
மரியாதை செய்ஓம்!

இசைக்குள் ஆழ்தலும்
தியானமே!