தென்கொரியாவிற்கு வடகொரியா அழைப்பு!!

50 வருடங்களுக்கு முன் கொரிய தீபகற்பத்தில் நடந்த சண்டைதான் வட கொரியா மற்றும் தென் கொரியாவை பிரித்து வைத்துள்ளது. தற்போது அந்த இடைவெளி அமெரிக்காவால் மேலும் அதிகரித்தது.

தற்போது தென் கொரியாவில் நடக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் இரண்டு நாடுகளும் ஒரே கொடியின் கீழ் விளையாடும் என்று கூறப்பட்டு இருக்கிறது. கடந்த வாரம் கொரிய தீபகற்பத்தில் இருக்கும் அமைதி கிராமம் என்ற இடத்தில் இரண்டு கொரியா நாட்டு முக்கிய அதிகாரிகளும் கலந்து கொண்ட கூட்டம் ஒன்றும் நடைபெற்றது.

இது மட்டும் இல்லாமல் தற்போது இரண்டு நாடுகளும் அரசியல் ரீதியா ஒன்றிணைய இருக்கிறது. இதற்கான முன்னெடுப்பை வடகொரியா செய்து வருகிறது.