த.தே.கூட்டமைப்பை ஆதரித்து ஒன்று கூடிய பெரிய நீலாவணை இளைஞர்கள்!

கல்முனை மாநகரசபையின்  முதலாம் தேர்தல் வட்டாரமான பெரியநீலாவணையில்  த.தே.கூட்டமைப்பு சார்பாக போட்டியிடும் வேட்பாளர் குபேரன் அவர்களை ஆதரரித்து நேற்று (25) அதிகளவான இளைஞர்கள் ஒன்று கூடினர்.

தமிழ் தேசியத்தால் ஒன்றுபட்ட எமக்கு சவால் என்று எதவுமில்லை, மாற்றுக்கட்சிகளில் களமிறங்கியுள்ளோருக்கு தக்கபாடத்தை தாம் புகட்டுவோம் எனவும், பல கட்சிகளுக்கு இத்தேர்தலில் நல்ல பாடம் கற்பிக்கப்படும் என இங்கு ஒன்று கூடிய இளைஞர்கள் தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில்…

கடந்தகால தேர்தலை எடுத்துநோக்கினால்  எமது கிராமம் தமிழ் தேசியத்தின்பால் கொண்டிருந்த உறுதியையும் அது வழங்கியிருக்கின்ற ஆதரவையும் புரிந்து கொள்ள முடியும். அம்பாரை மாவட்டத்திலிருந்து தெரிவான பாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்கள் இதனை நன்கு அறிவார்கள். அதைவிடவும் அர்ப்பணிப்புடன் இம்முறை செயற்பட முழுமையான ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளதாகவும் இதேபோல் ஏனைய பிரதேச இளைஞர்களும் தமக்குள்ளிருக்கும் வேறுபாடுகளை களைந்து ஒன்றுபட வேண்டும் வேண்டும்.

அபிவிருத்தி என்ற பெயரில் ஊடுருவ எத்தனிக்கும் பேரினவாத கட்சிகளுக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீதும் அதனை ஆதரிப்போர் மீதும் சேறுபூசும் வகையில் பிரச்சாரங்களை மேற்கொண்டுவரும் ஏனையவர்களுக்கு     பெரியநீலாவணை இளைஞர்களின்  இன்றைய  ஒன்று கூடலும் எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்களும்,   உறுதிப்பாடும் நடைபெறவுள்ள  தேர்தலில் நல்ல பாடத்தை கற்பிக்கும் என்று தெரிவித்தனர்.

நா.வைஷ்ணவன்

By admin