வாக்குச்சீட்டில் புள்ளடி மாத்திரமே இடவேண்டும்:இன்றேல் செல்லுபடியற்றதாகும்!
வாக்காளர்களை அறிவுறுத்துகிறார் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்!
(காரைதீவு நிருபர் சகா)
 

இம்முறை நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலில் எவ்வாறு வாக்களிப்பது. இதுதொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய விளக்க மளித்துள்ளார்.

வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்படும் வாக்காளர் அட்டையில் போட்டியிடும் கட்சிகளின்பெயர்கள் மற்றும் சின்னங்கள் சுயெட்சை குழுக்கள் என்பனவற்றை அடையாளம்காண்பதற்கான சின்னங்கள் குறியீடுகள் மாத்திரமே அச்சிடப்பட்டுள்ளன.

வேட்பாளர்கள் அல்லது தொகுதிகளின் பெயர் அல்லது இலக்கங்கள் குறிப்பிடப்படவில்லைஎன்று தேர்தல் ஆணைக்குழு தலைவர் சுட்டிக்காட்டனார்.

வாக்களிக்கும் போது நீங்கள் விரும்பும் கட்சியின் பெயர் சின்னம் அல்லது குழுக்கள் ஆகியசொற்களை அறிந்து கொள்வதற்கும் குறியீடு செய்வதற்கு ஓதுக்கப்பட்டுள்ள பகுதிக்கு கீழ்பகுதியில் ஒரே புள்ளடியில் மாத்திரமே இட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

வாக்காளர் அட்டையில் வாக்குச்சீட்டில் வேறெந்த குறியீடும் இடக்கூடாது என்றும் அப்படி வேறேதேனும் குறியீடு இருந்தால் செல்லுபடியற்றதாகும் என்றும் அவர்தெரிவித்தார்.

By admin