கல்முனை மாநகரசபையின் 2017 ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டில் வீதி புனரமைப்பு!

கல்முனை மாநகரசபையின் 2017 ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டில் இருந்து வட்டாரத்திற்கு ஒரு வேலைத்திட்டம் எனும் அடிப்படையில் வேலைத்திட்டங்கள்நடைபெறுகிறது . அந்த கையில் பெரியநீலாவணை விஷ்ணு ஆலய வீதி புனரமைக்கப்பட்டு வருகிறது. 100 மீற்றர் தூரம் ஐந்து இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இவ்வீதிக்கான புனரமைப்பு வேலைகள் நடைபெறுகிறது.

இவ்வீதிகளுக்கான நிதி எந்த அரசியல் கட்சிகளோ, வேட்பாளர்களோ, அரசியல்வாதிகளோ தொடர்பில்லாமல் கல்முனை மாநகரசபையின் 2017 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் இருந்தே நடைபெறுகிறது என கல்முனை மாநகர சபை ஆணையாளர்   தெரிவித்துள்ளார்.

-சௌவியதாசன்-

By admin