பெரியநீலாவணை த.தே. கூட்டமைப்பு வேட்பாளர் சோ. குபேரன் தேர்தல் காரியாலயம் திறந்து வைப்பு!

கல்முனை மாநகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக வீட்டுச் சின்னத்தில் பெரியநீலாவணையில்  தேர்தல் வட்டாரம் ஒன்றில்  போட்டியிடும் சோமசுந்தரம் குபேரன் அவர்களின் தேர்தல் காரியாலயம் 20 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.

வேட்பாளர்  குபேரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் ,முன்னாள் கல்முனை மாநகர சபை எதிர் கட்சி தலைவர்களான கு.ஏகாம்பரம் ,ஹென்றி மகேந்திரன்,  முன்னாள் மாநகரசபை உறுப்பினர் சி.ஜெயகுமார் , கல்முனை மாநகர சபைக்கான த.தே.கூட்டமைப்பின் வேட்பாளர்களும், ஆலயடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய பரிபாலன சபையின் தலைவர் சி.கிருஷ்ணராஜா மற்றும் கிராம, மாதர் அபிவிருத்திச் சங்கங்கள், விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகள் ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பெருந்திரளானவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

-வைஷ்ணவன்-

 

 

By admin