பாண்டிருப்பு 10 ஆம் வட்டார த.வி.கூட்டணி வேட்பாளர் மகேந்திரராஜாவின் தேர்தல் காரியாலயம் இன்று திறந்துவைக்கப்பட்டது.

தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பாக  கல்முனை மாநகரசபைத் தேர்தலில் பாண்டிருப்பு இரண்டு 10  ஆம் தேர்தல் வட்டாரத்தில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் செல்லப்பா மகேந்திரராஜா  அவர்களின் தேர்தல் காரியாலயம் இன்று 24 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.

தமிழர் விடுலை கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஈ. பி ஆர் எல் எப் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ன உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன்  நாடாளுமன்னற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் ஸ்ரீ S.ஹரிகரன் குருக்கள்  மற்றும் கட்சி முக்கியத்தர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியின் கல்முனை வேட்பாளர்கள்  பொதுமக்கள் ஆதரவாளர்கள் என பலர் கலந்த கொண்டிருந்தனர்.

தமிழர் விடுதலைக் கூட்டமைப்பின் செய்தியாளர் மாநாடும் இன்று கல்முனையில் இடம்பெற்றதுடன்   அம்பாறை மாவட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளர்களின் அறிமுகக் கூட்டமும் காரைதீவில் நடைபெற்றிருந்தன.

-சௌவியதாசன்-

    

 

By admin