மத்திய கிழக்கு அமைதித் திட்டம் பாலஸ்தீனத்தைச் சார்ந்திருக்கும்:அமெரிக்கா

மத்திய கிழக்கு அமைதித் திட்டத்தை அமெரிக்கா வெளியிடுவது, பாலஸ்தீனத்தைச் சார்ந்திருக்கும் என்று இஸ்ரேலில் பயணம் மேற்கொண்டிருக்கும் அமெரிக்கத் துணை அரசுத் தலைவர் மைக் பென்ஸ் 23ஆம் நாள் செய்தியாளரிடம் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், தொடர்புடைய நாடுகளுடன் தொடர்பை நிலைப்படுத்தி அமைதிக் கட்டுக்கோப்பு ஒன்றை அமெரிக்கா உருவாக்க முயன்றுள்ளது. ஆனால் இது, பாலஸ்தீனம் எப்போது பேச்சுவார்த்தைக்குத் திரும்பும் என்பதைச் சார்ந்திருக்கும் என்றார்.

மத்திய கிழக்குப் பயணத்தில் பென்ஸ் பயணிக்கும் மூன்றாவது நாடு இஸ்ரேலாகும். இதற்கு முன், அமெரிக்காவின் முக்கிய கூட்டணி நாடான எகிப்து மற்றும் ஜோர்டானில் அவர் பயணம் மேற்கொண்டிருந்தார்.