2018,2019ஆம் ஆண்டில் உலகப் பொருளாதார அதிகரிப்பு 3.9விழுக்காடாக உயர்வு

உலகப் பொருளாதார முன்னோட்டம் என்ற அறிக்கையை சர்வதேச நாணய நிதியம் 22ஆம் நாள் ஸ்விட்சர்லாந்தின் தாவொஸில் வெளியிட்டது. 2018ஆம் ஆண்டுக்குப் பின், உலகப் பொருளாதாரம் உயர்வேக வளர்ச்சிக் கட்டத்தில் நுழைந்துள்ளது. 2018 மற்றும் 2019ஆம் ஆண்டின் உலகப் பொருளாதார அதிகரிப்பு விகிதத்தின் மதிப்பீடு 3.9விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது. முந்தைய மதிப்பீட்டை விட, 0.2விழுக்காடு அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சீனாவின் பொருளாதாரம் நிலைத்தன்மையான அதிகரிப்பை நிலைப்படுத்தவுள்ளது. அதன் அதிகரிப்பு விகிதம் சுமார்  6.5விழுக்காடாக இருக்குமென இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது.

சர்வதேச நாணய நிதியம், தாவொஸில் உலகப் பொருளாதார முன்னோட்டம் என்ற அறிக்கையை வெளியிடுவது இதுவே முதன்முறை.