கல்முனை பிராந்திய இளைஞர் சேனையின் நிருவாகத் தெரிவும் பொதுக் கூட்டமும் சிறப்பாக இடம்பெற்றது!

கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர்களின் ஒன்றிணைவில் உருவாகியுள்ள இளைஞர் சேனையின் பொதுக்கூட்டமும், நிருவாகத் தெரிவும் பாண்டிருப்பு திரௌபதையம்மன் ஆலய முன்றலில் சிறப்பாக இடம்பெற்றது.

நிருவாக சபையாக,

தலைவர் – தாமோதரம் பிரதீபன்
செயலாளர் – நிதான்சன்

பொருளாளர் – சிந்துஜன்
உப தலைவர் – பிரதீபன்
உப செயலாளர் – திலோஜ் ஆகியோரும் நிருவாக சபை உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

கல்முனை பிராந்திய கல்வி, கலை, கலாசாரம், பொருளாதாரம் ஆகிய சமூக முன்னேற்ற செயற்பாடுகளை நோக்காக இயங்கவுள்ள இவ் அமைப்பில் மேலும் ஒவ்வொரு துறை சார்ந்த பொறுப்புகளுக்கும் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.

By admin