கிழக்கு மாகாண கல்வித்திணைக்களத்தின் பொங்கல் விழா திருக்கோவில் வலயத்தில் நேற்று சிறப்பாக நடைபெற்றது!

கிழக்கு மாகாண கல்வித்திணைக்களத்தின் தைப்பொங்கல் விழா இவ்வருடம் திருக்கோவில் கல்வி வலயத்தின் ஆலையடிவேம்பு கண்ணகிபுரம் விளையாட்டுத்திடலில் நேற்று 2018.01.21 மாகாணக்கல்விப்பணிப்பாளர் ஜனாப் ஆ.வு.யு.நிசாம் அவர்களின் தலைமையில்இதிருக்கோவில் வலயக்கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் வெகு விமர்சையாக நடைப்பெற்றது.

பாரம்பரிய கலாச்சார நிகழ்வுகள் ,உழவர் நடனம்மா,ட்டுவண்டி சவாரி,கும்மியாட்டம்கரகாட்டம், கோலாட்டம். கொம்புமுறித்தல் போன்ற பல நிகழ்வுகள் திருக்கோவில் வலய பாடசாலை ஆசிரியர்களின் வழிநடத்தலினால் மாணவர்கள் நிகழ்த்தினர்.

இந்நிகழ்வுக்கு விசேடஅதிதியாக அடியார் விபுலானந்தா .தலைவர்உலக சைவத்திருச்சபை இகனடா கலந்து சிறப்பித்தார்.சிறப்பு அதிதிகளாக மாகாணக்கல்வித்திணைக்கள அதிகாரிகள் தேசிய கல்வி நிறுவகத்தின் சைவசமயக்கல்வி செயற்திட்ட பொறுப்பாளர் திரு.பொன்.ஜெயரூபன், கிழக்கு மாகாண வலயக் கல்விப்பணிப்பாளர்கள் பங்குபற்றினர்.திருக்கோவில் பிரதேச சமூக. சமய அமைப்பாளர்களும் இந்நிகழ்வுக்கு சிறந்த பங்களிப்பை வழங்கியிருந்தனர்.

 

   

By admin