ஆப்கானிஸ்தான் காபூல் இன்டெர் கான்டினென்டல் ஹோட்டலில் தீவிரவாதிகள் தாக்குதல்: பலி எண்ணிக்கை 43 ஆக உயர்வு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள இன்டெர் கான்டினென்டல் ஹோட்டலில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை 43 ஆக உயர்ந்தது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்டர்கான்டினென்டல் ஓட்டலில் நேற்று இரவு ஆயுதங்களுடன் திடீரென புகுந்த தீவிரவாதிகள் அங்கு இருந்த வெலிநாட்டு சுற்றுப்பயணிகளை பிணையக்கைதிகளாக பிடித்து வைத்து இருந்தனர். அவர்களை மீட்க அந்நாட்டு பாதுகாப்பு படை வீரர்கள் முயற்சித்து வந்தனர்.

பாதுகாப்பு படை வீரர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் நடைபெற்ற 13 மணி நேர தொடர் போராட்டத்திற்கு பிறகு ஹோட்டலில் இருந்தவர்களில் 6 பேர் மற்றும் பயங்கரவாதிகள் 4 பேர் கொல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தநிலையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது. பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பிணைய கைதிகளை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தகவகள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி கண்டனம் தெரிவித்து உள்ளார். தீவிவாதிகளுக்கு ஆதரவளித்து, வளர்த்துவிடும் நாடுகளுக்கு எதிராக சர்வதேச நாடுகள் ஒரே வரிசையில் நிற்கவேண்டும் என குறிப்பிட்டு உள்ளார்.