சுப்பர் ஸ்டார் நடாத்திய கிரிக்கற் சுற்றுப்போட்டியில்   வாரணம் அணி  கிண்ணத்தை சுவிகரித்தது!

நற்பிட்டிமுனை சுப்பர்ஸ்டார்  விளையாட்டுக்கழகம்  பொங்கலை முன்னிட்டும் அமரர்   ரவிச்சந்தரன் ஞாபகார்த்தமாகவும் நடாத்திய   கிரிக்கட் சுற்றுப் போட்டியில் நற்பிட்டிமுனை வாரணம் விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்று அமரர் ரவிச்சந்திரன்  கிண்ணத்தை தனதாக்கியது.

பொங்கல் அன்று ஆரம்பமமான இச் சுற்றுப் போட்டியின் இறுதியாட்டம் நேற்று (20) நடைபெற்றது இறுதிப் போட்டியில் நற்பிட்டிமுனை வாரணம் அணியும், நற்பிட்டிமுனை விவேகானந்தா அணியும் போட்டியிட்டதில், முதலில் துடுப்பெடுத்தாடிய வாரணம் அணி 86 ஓட்டங்களைப் பெற்றிருந்தன வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய விவேகானந்தா அணி 62 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.

வாரணம் அணியின் வெற்றிக்காக கிரிசாந் 44 ஓட்டங்களையும், றுமேசன் 29 ஓட்டங்களையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

By admin