யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனுக்கு கண்டி அஸ்திரிய மல்வத்த பீட மகாநாயக்க தேரர்கள் அவசர அழைப்பினை விடுத்திருந்தனர்.

அதனையடுத்து அங்கு சென்ற நீதிபதிக்கு தேரர்கள் இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தனர்.

நீதிபதி இளஞ்செழியன் இன்று தனது 53 வது அகவையில் காலடி எடுத்து வைத்துள்ளார்.

இதனை முன்னிட்டு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், நீதிபதிக்கான அழைப்பினை மல்வத்து பீடம் விடுத்திருந்தது.

அழைப்பினை ஏற்று சென்றிருந்த நீதிபதி இளஞ்செழியனுக்கு, மகாநாயக்க தேரர்கள் ஆசிகளையும் வாழ்த்தினையும் வழங்கியிருந்தனர். இதன்போது நினைவு சின்னங்களையும் வழங்கிய நீதிபதியை கௌரப்படுத்தினர்.

அண்மைக்காலமாக துணிவான தீர்ப்புகள் காரணமாக, தென்னிலங்கையில் மிகவும் பிரபலமிக்கவராக நீதிபதி இளஞ்செழியன் மாறியுள்ளார்.

தமிழ் நீதிபதி ஒருவருக்கு தென்னிலங்கை மக்கள் மத்தியில் அதிக செல்வாக்கு கிடைத்த முதல் நபராக நீதிபதி இளஞ்செழியன் மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

By admin