கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனையின் பொதுக் கூட்டம் நாளை – இளைஞர்களுக்கு அழைப்பு!

கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனையின் பொதுக் கூட்டம் நாளை ஞாயிற்றுக் கிழமை (21.01.2018)  பாண்டிருப்பு திரௌபதையம்மன் ஆலய முன்றலில் மாலை 4,30  மணிக்கு நடைபெறவுள்ளது. இக் கூட்டத்திற்கு இளைஞர்களை கலந்து கொள்ளுமாறு இளைஞர் சேனை அழைக்கின்றனர்

.கல்முனை பிரதேச இளைஞர்கள் ஒன்றிணைந்த கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனை   பொங்கல் விழாவினை கல்முனை மாநகரில் சிறப்பாக நடாத்தியிருந்தது. இவ்வாறாறே எல்லோரும் இணைந்து எமது சமூகத்தின் கல்வி, கலாச்சாரம், பொருளாதாரம் ஒவ்வொன்றிலும் அவதானங்களை செலுத்தியதான எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடலும், பொங்கல் விழா தொடர்பான கணக்கறிக்கை வெளியிடுதலும் இக் கூட்டத்தில் இடம்பெறவுள்ளதால் கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர்கள் தவறாது சமூகம் தருமாறு இளைஞர் சேனை அழைப்பு விடுக்கின்றனர்.

நாள் : ஞாயிற்றுக்கிழமை ( 21.01.2018 )
இடம் : திரௌபதை அம்மன் ஆலய முன்றல்
நேரம் : பி.ப 4.30

 

By admin