வழக்கு தொடருவதற்கு பதிலாக அந்த இடத்திலேயே தண்டப்பணம் : சட்டத்தில் திருத்தம்

வீதி ஒழுங்குவிதிகள் மற்றும் வாகன சட்டங்களை மீறும் சாரதிகளுக்கு எதிராக வழக்கு தொடருவதற்கு பதிலாக அந்த இடத்திலேயே தண்டப்பணத்தை அறவிடும் வகையில் வாகன போக்குவரத்து சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி குற்றமிழைத்தவர்கள் அந்த குற்றத்தை ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் அவருக்கு எதிராக வழங்கு தொடருவதற்கு பதிலாக அந்த இடத்திலேயே தண்டப்பணத்தை அறவிடும் வகையில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 15ஆம் திகதி இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 33 குற்றச் செயல்கள் தொடர்பாக தண்டப்பணம் அறவிடப்படவுள்ளது.

நன்றி – சமகளம்

By admin