ஜேர்மன் தமிழாலயத்தால் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது!

(டினேஸ்)

உழவர் பெருநாளாம் தைபொங்கல் தினத்தை சிறப்பிக்கும் வகையில் ஜேர்மன் வாறண்டோர்வ் நகரத்திலே இயங்கிவரும் தமிழ் பாடசாலையான தமிழாலயத்தில் தமிழர் திருநாள் தைப்பொங்கல் விழாவினை தமிழர்களின் கலாச்சாரத்தையும் தமிழையும் அடுத்த தலைமுறைக்கும் கற்பிக்கும் வகையில் தமிழ் கலாச்சாரங்களுக்கமைவாக கொண்டாடப்பட்டது.

இவ்விழாவானது ஒவ்வொரு ஆண்டும் ஜேர்மன் நாடு முழுவதும் இயங்கிவரும் அனைத்து தமிழாலயங்களிலும் நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்க விடையமாகும்.
அந்தவகையில் இந் நிகழ்வை அனைவரும் கலாச்சார உடைகள் அணிந்து உழவர் திருநாளை சிறப்பிக்கும் வகையில் சூரிய அனுஸ்டானத்துடம் வெகு விமர்சையாக கொண்டாடினர்.

இத்தமிழாலயத்தில் மாத்திரம் 90 பிள்ளைகள் கல்வி கற்று வருவதோடு இங்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் பணம் பெறாமல் சேவையின் அடிப்படையில் கற்பிப்பதும் சிறந்த விடயமாகும்..

By admin