அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி

கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி-5 ரக ஏவுகணையின் சோதனையை இந்தியா வியாழக்கிழமை வெற்றிகரமாக நிறைவேற்றியது.  அணு ஆயுதங்களைத் தாங்கிச் செல்லும் இந்த ரக ஏவுகணை, 5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை பாய்ந்து தாக்கக் கூடிய வல்லமை படைத்தது. இச்சோதனை ஒடிஸாவில் உள்ள ஏவுதளத்தில் நடைபெற்றது.

50 டன் எடையுடைய இந்த ஏவுகணை, அதிக அளவு தயார் செய்யப்பட்டு ராணுவத்துடன் இணைப்பதற்கு முன்பாக, இன்னும் சில சோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.