தென்னாப்ரிக்காவில் அபூர்வம் – 10 நாட்களுக்கு முன் இறந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது

தென்னாப்ரிக்காவில் சுமார் 10 நாட்களாக இறந்த நிலையில் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்த அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.

தென்னாப்ரிக்காவின் தாம்போ மாவட்டத்தில் தயிசி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தைச் சோ்ந்த 9 மாத கா்ப்பிணி டோயி சில தினங்களுக்கு முன்னா் இறந்து விட்டார்.
நிறை மாத கா்ப்பிணி திடீரென உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களை கடும் சோகத்தில் ஆழ்த்தியது. தொடா்ந்து முறைப்படி சடங்கு, சம்பரதாயங்கள் மரணமடைந்த பெண்ணின் குடும்பத்தினர் நடத்தினர். இறுதியில் அப்பெண்ணின் உடல் அடக்கம் செய்யப்படுவதற்காக பிணவறையில் வைக்கப்பட்டது.
சிறிது நேரம் கழித்து பிணவறையில் உள்ள பணியாளா்கள் பெண்ணின் உடலை எடுப்பதற்காக அருகில் சென்றுள்ளனா். அப்போது இறந்த பெண்ணின் கால்களுக்கு இடையே சிசு ஒன்று இறந்த நிலையில் இருந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பணியாளா்கள் உடனடியாக உறவினா்களுக்கு தகவல் தெரிவித்தனா்.
இது தொடா்பாக மருத்துவா்கள் தரப்பில் கூறுகையில், ஆப்ரிக்காவில் இதுவரை இப்படியொரு சம்பவம் நடைபெற்றதாக தெரியவில்லை. ஆனால் இறந்த உடலில் நுண்ணுயிரிகளின் செயல்பாட்டால் இச்சம்பவம் நடந்திருக்கலாம். இல்லையென்றால் இறப்பிற்கு பின்பு தசையில் ஏற்படும் தளா்வு காரணமாக குழந்தை வெளியில் தள்ளப்பட்டிருக்கலாம். இது இயற்கையான மற்றும் அபூா்வமான நிகழ்வு தானே தவிற இதற்கு அமானுஷ்ய சக்திகள் காரணம் என்று கூறமுடியாது, என கூறினர்.
இருப்பினும் மரணமடைந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.