பன்னாடுகளுக்கு ஐ.நா தலைமைச் செயலாளரின் வேண்டுகோள்

2017ஆம் ஆண்டு உலக நிலைமை பின்னடைவைச் சந்தித்துள்ளது. உலகத்தை இயல்பாகவே வளர்ந்து வரும் பாதைக்குத் திரும்பச் செய்யும் வகையில், பல்வேறு நாடுகள் ஒன்றுபட்டு, துணிவுடன் அறைகூவல்களைச் சமாளிக்க வேண்டும் என்று ஐ.நா தலைமைச் செயலாளர் குட்ரெஸ் 16ஆம் நாள் தெரிவித்தார்.

அன்று ஐ.நா பேரவையின் அதிகாரப்பூர்வமற்ற கூட்டத்தில் 2018ஆம் ஆண்டுக்கான தனது முக்கியப் பணிகள் குறித்து விவரித்த போது அவர் இதைத் தெரிவித்தார்.

காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பது, மக்கள் இதர நாட்டுக்கு குடியேறுவதை ஒழுங்குபடுத்துவது, கொரியத் தீபகற்ப அணு ஆயுதமின்மை, மத்திய கிழக்கு மோதலை இணக்கம் செய்வது, பயங்கரவாதத்தை ஒடுக்குவது, ஐ.நாவின் அமைதிக்காப்புப் பணியை வலுப்படுத்துவது முதலிய 12 பணிகளை தனது முக்கியப் பணிகளாக கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அன்று இவ்வாண்டின் முதலாவது செய்தியாளர் கூட்டத்தில் அவர் பேசுகையில், சர்வதேச விவகாரங்களில் சீனாவின் செல்வாக்கு உயர்ந்து வருகின்றது என்றும், இது வரவேற்கத்தக்க முன்னேற்றமாகும் என்றும் தெரிவித்தார்.