தென்-வட கொரியாவின் மேலதிக பேச்சுவார்த்தைக்கு சீனா வரவேற்பு

அண்மையில் பிங்சாங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி தொடர்பாக வட கொரியாவும் தென் கொரியாவும் அண்மையில் ஒத்துழைப்பை உருவாக்கியுள்ளன. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி விவகாரத்தைத் தாண்டி, பேச்சுவார்த்தை நடத்த இரு தரப்பும் விரும்பியுள்ளன. இதனால், கொரிய தீபகற்ப நிலைமையும் தணிவடைந்துள்ளது. பல்வேறு தரப்புகள் இவ்வாய்ப்பை இறுகப்பற்றி கொரிய நாடுகளுக்கிடையே உள்ள அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னேற்ற வேண்டும் என்றும் கொரிய தீபகற்ப நிலைமை சரியான திசையில் வளர்வதை வழிக்காட்ட வேண்டும் என்றும் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லூ காங் 18ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.