மத சுதந்திரம் இல்லாமையால் பாகிஸ்தானை விட்டு வெளியேறும் சிறுபான்மையினர்!

பாகிஸ்தானில் பயங்கரவாதம் அதிகரிப்பு மற்றும் மத சகிப்புத்தன்மையின்மை அதிகரிப்பு காரணமாக ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள், அகமதிஸ் மற்றும் இந்துக்கள் அந்நாட்டைவிட்டு வெளியேறி உள்ளனர். பாகிஸ்தானில் இஸ்லாமிய அமைப்புகளால் சிறுபான்மையினர் மதரீதியிலான தாக்குதல்களை எதிர்க்கொண்டு வருகிறார்கள். இஸ்லாமிய அமைப்புகளின் செயல்பாடு இதயத்தை நொறுக்கும் விதமாக காணப்படுகிறது. அகமதியா சமூதாயம் பாகிஸ்தானில் வெளிப்படையாகவே கொலைமிரட்டலை எதிர்க்கொண்டு வருகிறது. மிகவும் ஆபத்தான நிலையில் அகமதியா சமூதாயம் பாகிஸ்தானில் உள்ளது.
பாகிஸ்தான் அரசியலமைப்பு சட்டம் 1974-ல் இரண்டாவது திருத்தம் காரணமக அகமதிஸ்கள் மிகவும் பாதகமான விளைவுகளை சந்தித்து வருகிறார்கள்.
பாகிஸ்தான் குற்றவியல் விதிமுறையின்படி அகமதிக்கள் குர்ஆன் படித்தாலும், இஸ்லாமிய பெயரை வைத்தாலும் சிறைத் தண்டனையை விதிக்கமுடியும் என் ஆசியா டைம்ஸ் செய்தி வெளியிட்டு உள்ளது.
பாகிஸ்தான் 1947-ல் உருவான பின்னர் அகமதிஸ்கள் பலிகடா ஆக்கப்பட்டு வருகிறார்கள் என அச்சமூதாயத்தின் செய்தித் தொடர்பாளார் சலீம் உத்தின் பேசிஉள்ளார். நாட்டை உருவாக்குதிகளில் அகமதிஸ் சமூதாயத்தினரின் பங்கு என்ன என்பதை பொதுமக்கள் மறந்துவிட்டனர் என்றார்.
பாகிஸ்தானின் நாத்திகர்களின் நிலையானது மிகவும் அதள பாதாளத்தில் உள்ளது. நாத்திகர்கள் தங்களுடைய தகவல்களை முற்றிலுமாக மறைக்கிறார்கள், சமூக வலைதளங்களிலும் தங்களுடைய கொள்கையை தெரிவிப்பதும் கிடையாது. அப்படி வெளியே ஏதாவது தெரியவந்தால் அவர்கள் உடனடியாக கடத்தப்படுகிறார்கள். தங்களுடைய நிலைப்பாட்டை சமூக வலைதளம் மற்றும் பிற எந்தஒரு தளத்திலும் தெரிவிப்பது பாதுகாப்பானது கிடையாது என உணர்கிறார்கள். கிறிஸ்தவர்கள், இந்துக்கள் மற்றும் அகமதிஸ்கள் போன்று நாத்திகர்களும் அச்ச உணர்வில் உள்ளனர். பாகிஸ்தானில் கிறிஸ்தவ தேவாலயங்களை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் மற்றும் உயிரிழப்பு தொடர் கதையாக உள்ளது.
இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் பயங்கரவாத இயக்கங்கள் காரணமாக அச்சுறுத்தல் அதிகரித்து உள்ளதால் கிறிஸ்தவர்கள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள், பிற நாடுகளில் தஞ்சம் கோருகிறார்கள். பாகிஸ்தானில் இந்துக்களின் நிலையும் இதேபோன்றுதான். அவர்களும் வெளிநாடுகளில்தான் தஞ்சம் கோருகிறார்கள். இந்துக்கள் வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வரும் ஒன்றுதான். பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் (பிஎம்எல்-என்) செனட் சபை உறுப்பினரான ரமேஷ் குமார் பேசுகையில், “முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5000 இந்துக்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேறி வருகிறார்கள்,” என்றார்.
இந்து பெண்கள் வலுக்கட்டாயமாக இஸ்லாமியர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டு வருகிறார்கள். இந்து கோவில்கள் கொள்ளையடிக்கப்படுகிறது. இந்தியாவை இலக்காக்கும் வகையில் இந்துக்களின் நிலையானது மிகவும் மோசமாக காணப்படுகிறது. இஸ்லாமிய அமைப்புகள் சிறுபான்மையினரின் மத சுதந்திரத்தை ஒவ்வொரு நிலையிலும் பறிக்க நடவடிக்கையை முன்னெடுத்து வருகிறது.