உலகப் பொருளாதார மன்றத்தின் 48ஆவது ஆண்டுக்கூட்டம்

உலகப் பொருளாதார மன்றத்தின் 48ஆவது ஆண்டுக் கூட்டம் ஜனவரி 23 முதல் 26ஆம் நாள் வரை ஸ்விட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும். இது தொடர்பாக, இம்மன்றத்தின் செயல் தலைவர் ஷிவாப் 16ஆம் நாள் ஜெனிவாவில் ஆண்டுக்கூட்டம் பற்றி செய்தியாளர் கூட்டம் நடத்தினார்.

நடப்பு ஆண்டுக் கூட்டத்தின் போது, பொருளாதாரத்தின் தொடரவல்ல வளர்ச்சியைத் தூண்டுவது, பலதரப்பட்ட கருத்துக்களையும் பல துருவ சக்திகளையும் கொண்டுள்ள உலகத்தைச் சமாளிப்பது, சமூகக் கருத்து வேற்றுமையை நீக்குவது, வளைந்து கொடுக்கும் தொழில் நுட்ப நிர்வாக அமைப்பு முறையை உருவாக்குவது ஆகியவை தொடர்பாக சுமார் 400 கூட்டங்கள் நடத்தப்படும்.

அமெரிக்க அரசுத் தலைவர் டோனஸ்ட் டிரம்ப், பிரெஞ்சு அரசுத் தலைர் மாக்ரோன், பிரிட்டன் தலைமையமைச்சர் தெரேசா மை அம்மையார் உள்ளிட்ட சுமார் 70 அரசுத் தலைவர்கள் மற்றும் தலைமையமைச்சர்கள் நடப்பு ஆண்டுக் கூட்டத்தில் கலந்து கொள்வர். இந்தியத் தலைமையமைச்சர் நரந்திர மோடி இக்கூட்டத்தின் துவக்க விழாவில் முக்கிய உரை நிகழ்த்துவார். அதோடு, சுமார் 1900 தொழில் முனைவோர்களும் இக்கூட்டத்தில் கலந்து கொள்வர்.