ஆன்மீக அரசியலில் இணைந்து பணியாற்ற அவசியம் இல்லை: கமல் பேட்டி

‘‘ஆன்மீக அரசியலில் இணைந்து பணியாற்றுவதற்கான அவசியம் இல்லை’’ என்று நடிகர் கமல் கூறினார். மணப்பாக்கம் ராமாபுரம் எம்.ஜி.ஆர். இல்ல தோட்டத்தில் நடந்த எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு எம்ஜிஆர் விருதினை கமல் பெற்றார். பின்னர், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:  மக்களின் பலத்தை மக்களுக்கு எடுத்துரைக்கவே இந்த சுற்றுப்பயணம். மக்களுக்கு ஞாபக மறதி அதிகம் அவர்களுக்கு மீண்டும் எடுத்து கூறவே இந்த சுற்றுப்பயணம். ரஜினியுடன் நான் இணைந்து செயல்படுவது பற்றி காலம்தான் முடிவு செய்யும். ஆன்மீக அரசியலில் இணைந்து பணியாற்றுவதற்கான அவசியம் இல்லை. என் நம்பிக்கை எனக்கு; அவர் நம்பிக்கை அவருக்கு. இவ்வாறு கமல் கூறினார்.