கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் அம்பாறை மாவட்ட கலந்துரையாடலுக்கு அழைப்பு!

கிழக்கு மாகாண தமிழர்களின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் அம்பாறை மாவட்டத்திற்கானது எதிர்வரும் 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில்  அக்கரைப்பற்றில் நடைபெறவுள்ளது.

அக்கரைப்பற்று குருக்கள் வீதியில் அமைந்துள்ள இந்து இளைஞர் மன்ற கட்டிடத்தில், காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ள இக் கலந்துரையாடலில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு, கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் இணைப்பாளர்களான சட்டத்தரணி த.சிவநாதன் மற்றும் செங்கதிரோன் கோபாலகிருஸ்ணன் ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளார்கள்.

இக் கூட்டம் தொடர்பான மேலதிக விபரங்களுக்கு இந்த இணைப்பை அழுத்தவும் –east

 

By admin