ஈராக்கில் நேற்று முன்தினம் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் பலி 38 ஆக  உயர்வு ., 100-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம்

ராக்கில் நேற்றுமுன்தினம் தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 38-ஆக உயர்ந்துள்ளது.மேலும் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. தாக்குதலை ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு நடத்தி இருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. ஈராக்கில் வரும் மே மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த தாக்குதல் அரங்கேற்றப்பட்டுள்ளது. சம்பவம் நடந்து 48 மணி நேரம் கூட ஆகாத நிலையில் தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் பொதுமக்கள் சகஜமாக நடமாட துவங்கியுள்ளனர்.

அதே சமயம் இறந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன