பெப்ரவரி 21ஆம் தேதி அரசியல் கட்சியின் பெயர் அறிவிப்பு: கமல்ஹாசன் தகவல்

 கமல்ஹாசன் அரசியல் கட்சியின் பெயரை மிக விரைவில் அறிவிக்கவுள்ளதாக ஏற்கனவே கூறியுள்ளார். மேலும் சமீபத்தில் மலேசியாவில் நடந்த நட்சத்திர விழாவின் போது தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யும் தேதியையும் அறிவிக்கவுள்ளதாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் வரும் பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி முதல் தனது சொந்த ஊரான ராமநாதபுரத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கவுள்ளதாகவும், அன்றைய தினம் தனது அரசியல் கட்சியின் பெயர் மற்றும் கொள்கைகளை அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரத்தில் தொடங்கும் இந்த அரசியல் பயணம், மதுரை, திண்டுக்கல், மற்றும் சிவகெங்கை மாவட்டத்திலும் தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு கமல்ஹாசனின் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.