கல்முனை ஆதார வைத்தியசாலை கடந்தாண்டில் நான்கு இலட்சம் நோயாளிகளுக்கு சிகிச்சை  வழங்கியுள்ளது!

கடந்தாண்டில் கல்முனை ஆதார வைத்தியசாலை 3இலட்சத்து 83ஆயிரத்து 455 நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கியுள்ளதாக வைத்தியசாலை அத்தியட்சகர் வைத்தியகலாநிதி டாக்டர் இரா.முரளீஸ்வரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:

மொத்தமாக வெளிநோயாளர் பிரிவில் 2இலட்சத்து 47ஆயிரத்து 135 நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.

33ஆயிரத்து 675 நோயாளிகள் விடுதிகளுக்கு அனுமதி பெற்று சிகிச்சைபெற்றனர். இதேவேளை 1இலட்சத்து 1432 நோயாளிகள் கிளினிக் சிகிச்சை பெற்றுள்ளனர்.

இதேவேளை 1222 டெங்கு நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது என டாக்டர் முரளீஸ்வரன் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை 5லட்சத்து 76ஆயிரத்து 407 நோயாளிகளுக்கு மருத்துவ ஆய்வுகூட வசதி அளிக்கப்பட்டது. 16244பேருக்கு எக்ஸ்றே வசதி அளிக்கப்பட்டதுடன் 41084பேருக்கு ஈசிஜி வசதி வழங்கப்பட்டது.

மேலும் 3455 நோயாளிகளுக்கு சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 290பேருக்கு கண் சத்திரசிகிச்சை செய்யப்பட்டதாக டாக்டர் முரளீஸ்வரன் மேலும் தெரிவித்தார்.

கடந்தாண்டைவிட இத்தொகை கணிசமானளவு அதிகரித்திருப்பதாக புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
777பேர் நாய்க்கடிக்கு இலக்காகிவந்து சிகிச்சை பெற்றுள்ளதோடு 13075பேருக்கு பல் சிகிச்சை வழங்கப்பட்டது என அவர்  தெரிவித்தார்.

 (காரைதீவு நிருபர் சகா)

 

 

By admin