நற்பிட்டிமுனை சிவசக்திவித்தியாலய வித்தியாரம்ப விழா

தரம்-1 க்கு அனுமதிக்கப்பட்ட மாணவர்களை வரவேற்கும் வித்தியாரம்ப நிகழ்வு நற்பிட்டிமுனை சிவசக்தி வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் சஞ்சீவி சபாரெட்ணம் தலைமையில் 15 ஆம் திகதி நடைபெற்றது.

இந் நிகழ்வுக்கு வலயக்கல்வி அலுவலக பிரதிநிதியாக திரு.மா.லக்குணம்(I.S.A) அவர்களும் கற்றல்  உபகரணங்களை அன்பளிப்பு செய்த திரு.க.மதிமோகன், மற்றும் பாடசாலை அபிவிருத்திச்சங்க உறுப்பினர் திரு.வெற்றிவேல் அவர்களும் கலந்துகொண்டனர்.

இந் நிகழ்வை ஆரம்ப பிரிவு பகுதி தலைவர்  திருமதி.ஜெயந்தி குணராஜா ஆசிரியை  நெறிப்படுத்தினார். தரம் ஒன்றுக்கு புதிதாக இணைந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

மகிழ்ச்சிகரமான ஆரம்பமாக வித்தியாரம்ப விழாவினை மேற்கொள்ளும்படி கல்வி அமைச்சு சுற்றறிக்கை மூலம் பணித்ததற்கிணங்க இந்நிகழ்வு நாடுபூராவும் இடம்பெற்றது.

By admin