சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்

ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள புதிய படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

‘வேலைக்காரன்’ படத்தைத் தொடர்ந்து பொன்.ராம் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். 24 ஏ.எம் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் சமந்தா, சிம்ரன், நெப்போலியன், சூரி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். சிவகார்த்திகேயன் பிறந்தநாளன்று ஃபர்ஸ்ட் லுக்குடன் படத்தின் பெயரையும் அறிவிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

பொன்.ராம் படத்தைத் தொடர்ந்து ‘இன்று நேற்று நாளை’ இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சிவகார்த்திகேயன். 24 ஏ.எம் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது. 2019-ம் ஆண்டில் இப்படம் வெளியாகும் என்றும் அறிவித்திருக்கிறார்கள்.

முழுக்க அறிவியல் சம்பந்தப்பட்ட படம் என்பதால், இப்படத்திற்கான முதற்கட்ட பணிகள் நீண்டகாலமாகவே நடைபெற்று வருகிறது. இந்தாண்டில் தொடங்கப்படவுள்ள படப்பிடிப்பிற்கு முன்பாகவே படக்குழுவினரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளார்கள்.