கல்முனை பிராந்திய இளைஞர் சேனையின் பொங்கல் விழா ஒரு வரலாற்றுப் பதிவு

கல்முனை பிராந்திய  இளைஞர் சேனையின் பொங்கல் விழா தொடர்பாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் வெளியிட்ட அறிக்கை…..

உலகெங்கும் பரந்து வாழும் இந்துக்கள் பெருமையுடன் கொண்டாடும் தைப்பொங்கல் விழாவை கல்முனை இளைஞர் சேனை எழுச்சியுடனும்இ மகிழ்சியுடனும் தமிழர்களின் பண்பாட்டை போற்றிப் புகழ்ந்து கொண்டாடியமை ஒரு வரலாற்றுப் பதிவாகும். இந்த வரலாற்றுப் பதிவை ஏற்படுத்திய அத்தனை தமிழ் இளைஞர்களுக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிப் பூக்களை காணிக்கையாக்குவதுடன் இந்த ஒற்றுமை தொடர்ந்தும் பேணிப்பாதுகாக்கப்பட வேண்டுமென்று கோரிக்கை விடுக்கின்றேன்.

இவ்வாறு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் விடுத்துள்ள நன்றிப் பெருக்குடனான செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

எந்தவிதமான அரசியல் கலப்பும் அற்ற வகையில் தமிழரின் பாரம்பரிய விழாவாகிய தைப்பொங்கல் விழாவை கல்முனை மாநகரில் உணர்வு பூர்வமாக கொண்டாடியது போன்று எதிர்காலத்தில் தமிழர்களின் பாரம்பரிய கலைஇ கலாசார விடயங்களை பேணிப்பாதுகாப்பதில் கல்முனை இளைஞர் சேனை தொடர்ந்தும் பணியாற்ற வேண்டும். தங்களது தூய பணிக்கு தமிழ் மகன் என்ற வகையில் என்னால் இயன்ற உதவி, ஒத்தாசைகளை வழங்குவதற்கு என்றென்றும் சித்தமாக உள்ளேன்.

ஒரு இனத்தின் இருப்பும் அடையாளம் அவ்வினத்தின் கலை, கலாசாரம், பண்பாடு என்பனவாகும் இந்த உண்மையை உணர்ந்து பெருமைப்படுத்திய அத்தனை தமிழ் இளைஞர்களுக்கும் நன்றி தெரிவிப்பதுடன் சமூக சீர்கேடான விடயங்கள் நிகழும் போது எமது இளைஞர்கள் அதனை தட்டிக் கேட்டு தடுத்து நிறுத்துபவர்களாகவும் இருக்க வேண்டும்.

By admin