கல்முனை மாநகரில் இளைஞர் சேனையின் எற்பாட்டில் பிரமாண்டமாக நடைபெற்ற பொங்கல் விழா!

தைப்பொங்கல் விழா இன்று(14) கல்முனை மாநகரில்  இளைஞர் சேனையின் எற்பாட்டில் பிரமாண்டமாக நடைபெற்றது.

கல்முனை, பாண்டிருப்பு, பெரியநீலாவணை, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, மணற்சேனை, துரைவந்தியமேடு கிராம இளைஞர்கள் இணைந்து உருப்பெற்ற கல்முனை தமிழ் இளைஞர் சேனையின் எற்பாட்டில் தமிழர் கலாசார பிரதிபலிப்புக்களுடன்  கல்முனை மாநகரில் இப் பொங்கல் விழா மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எச்.டீ.கே.எஸ். ஜெயசேகர மற்றும் விசேட அதிதிகளாக கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஆர்.முரளீஸ்வரன், அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நுவான் வெதசிங்க, கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜே.கே.எஸ்.ஜெயநத்தி மற்றும் இந்து மதகுருமார், கலாச்சார உத்தியோகஸ்த்தர், கல்முனை தமிழ் இளைஞர் சேனை உறுப்பினர்கள். அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் என பெரந்தரளானோர் கலந்துகொண்டனர்.

எமது பாரம்பரியங்களை பிரதிபலிக்கும் வகையில் கல்முனை மாநகர் அலங்கரிக்கப்பட்டிருந்ததுடன், மாணவர்களின் பாரம்பரிய  கலாசார நடனங்களுடன்  மாட்டு வண்டி ஊர்வலமும் இடம்பெற்றன. இளைஞர்களும், பெரியவர்களும் பெண்களும் கலாசார உடையுடன் பங்குபற்றியிருந்தனர்.

இளைஞர்கள் இரவு பகலாக இந் நிகழ்வுக்காக தங்கள் நேரங்களை ஒதுக்கி  நகர் அலங்கரிப்பு வேலைகள். விழா ஏற்பாடுகளை சிறப்பாக  செய்து பொங்கல் விழாவை திறம்பட செய்து முடித்துள்ளமை எல்லோரிடமும் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இவ்வாறான ஒருங்கிணைந்த, ஒற்றுமையான செயற்பாடுகளாக இன்னும் பல  முயற்சிகள் வெற்றியடைய அடைய கல்முனை இளைஞர் சேனைக்கு கல்முனை நெற் ஊடக வலையமைப்பின் வாழ்த்துக்கள்.

புகைப்படங்கள் – ஹரி ( studio reminds)

 

 

  

 

   

 

  

By admin