பெரியநீலாவணை தீபம் அமைப்பால்  கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!

பெரியநீலாவணையைச் சேரந்த மத்தியகிழக்கு நாடுகளிலும்.ஐரோப்பிய நாடுகளிலும் தொழில் புரிந்து வரும் இளைஞ்ஞர்களை உள்ளடக்கியதாக கட்டார் நாட்டில் தமது தலைமைக் காரியாலயத்தைக் கொண்டியங்கும் தீபம் சமூக அபிவிருத்தி மற்றும் வறுமை ஒழிப்புக்கான வலையமைப்பினரின் ஏற்பாட்டில் பெரியநீலாவணை தொடர்மாடிக் கட்டிடத்தில் வசித்து வரும் சிறந்த முறையில் கல்வி கற்று தாமூம் சமூகத்தில் சாதனையாளர்களாக வர வேண்டும் என்ற இலட்சியக் கனவை சுமந்தவர்களாக தகுந்த கற்றல் உபகரணங்ள் இல்லாது சிரமங்களை எதிர் கொள்ளும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 11.01.2018 வியாழனன்று பெரிய நீலாவணை.தொடர்மாடியில் அமைந்துள்ள கேட்போர் கூடத்தில் எமது தீபம் அமைப்பின் தாயக கிளை உறுப்பினர்கள் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டு மிகவும் சிறப்பாக நடைபெற்றிருந்தது.

இன் நிகழ்வில் பெரியநீலாவணையைச் சேர்ந்த ஓய்வு நிலை கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.பி.ஜெகநாதன்இ ஆலையடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் தலைவர் திரு .எஸ்.கிருஷ்ணராஜா,.கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.பி.மதன்ராஜ், ..கல்முனை த.பி பிரதேசசெயலகத்தின் முகாமைத்துவ உதவியாளர் திரு.எம்.தில்லை, .பெரியநீலாவணை ஒன்று பி கிராம சேவை உத்தியோகத்தர், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், .விஷ்னு மகா வித்தியாலயத்தின் ஆசிரியர் திரு.எஸ்.சதீஷ்குமார் ,நீதிமன்ற உதவியயாளர் திரு.என்.விஜிதரன், எமது தீபம் அமைப்பின் அபிமானி திரு.கோகுலன் மற்றும் உறுப்பினர்கள் நலன் விரும்பிகள் ஆட்டோ சங்க தலைவர் திரு.வசந்தகுமார்இ மாணவர்கள் பெற்றோர் இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தீபம் அமைப்பின் முதலாவது அங்குரார்ப்பன நிகழ்வு இது என்பதும் குறிப்பிடத்தக்கது. நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் தீபம் அமைப்பினர் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றனர். .

கல்முனை நெற் செய்திகளுக்காக .ஊடகப் பிரிவு .தீபம்.என்றும் மக்களோடும் மக்கள் நலனோடும் தீபம்.

உறவுகளைப் பிரிந்து தொலைதூரம் தொழில் புரிந்தாலும் இவ்வாறு சொந்த ஊருக்காக கல்வி வளர்ச்சிக்காகவும் சிந்தித்து செயற்படும் தீபம் அமைப்பினருக்கு கல்முனை நெற் ஊடக வலையமைப்பின் வாழ்த்துக்கள்.

By admin