கல்முனை  கண்ணகியம்மன் ஆலயத்திற்கருகில், விசமிகளால் மாட்டின் எலும்புகளும் தோலும் வீசப்பட்டுள்ளது!

கல்முனை கடற்கரை கண்ணகி அம்மன் ஆலயம் அமைந்துள்ள வீதியில் ஆலயத்தை அண்மித்ததாய் விசமிகளால் இறைச்சிக்காக அறுக்கப்பட்ட மாடுகளின் எழுபுகளும், மாட்டுத் தோல்களும் வீசப்பட்டிருந்தது .
நேற்று வெள்ளிக்கிழமை (12) ஆலயத்திற்கு பக்கதர்கள் அதிகமாக வருகை தரும் நாளில் வேண்டும் என்றே இப்பிரதேசம் துர்நாற்றம் வீசும் வகையிலும் இறைச்சிக்காக வெட்டப்பட்ட மாட்டின் எலும்புகள், தோல்கள், குடல்கள் வீசப்பட்டமையானது மிகவும் கீழ்த்தரமான கேவலமான செயலாகும் .

ஆலயம் அமைந்துள்ள இப்பிரதேசத்தில் இதற்கு முன்னரும் அடிக்கடி இவ்வாறு  விலங்குகளின் கழிவுகளும், குப்பைகளும் வீசப்பட்டிருந்தன.  கல்முனை தரவை சித்தி விநாயகர் ஆலய சூழலிலும் குப்பைகள் கொட்டப்படுகிறது எனவே இவ்வாறான செயற்பாடுகள் இனங்களுக்கடையே முறுகல் நிலைகளையே ஏற்படுத்தும்,  இந்த விசமிகளை கண்டு பிடித்து கைது செய்ய கல்முனை பொலிஸாரும், உரிய அதிகாரிகளும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்களும், ஆலய நிருவாகசபையினரும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

 

By admin