கல்முனை மாநகரில் மாபெரும் பொங்கல் விழா!

தமிழர் திருநாளான தைப்பொங்கல் பெருவிழாவாக கல்முனை மாநகரில் கல்முனை தமிழ் இளைஞர் சேனையின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெறவுள்ளது.

கல்முனை, பாண்டிருப்பு, பெரியநீலாவணை, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, துரைவந்தியமேடு,மணற்சேனை ஆகிய கல்முனை பிரதேச கிராம இளைஞர்களின் ஒன்றியமாய் உருப்பெற்றுள்ள கல்முனை தமிழ் இளைஞர் சேனையின் ஏற்பாட்டில், எதிர்வரும் 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கல்முனை பழைய பஸ் நிலைய சதுக்கத்தில் காலை ஒன்பது மணிக்கு பொங்கல் நிகழ்வு நடைபெறவுள்ளது.

பொங்கல் பொங்கி சூரியபகவானுக்கு வணக்கம் செலுத்தும் தமிழர் பாரம்பரிய நிகழ்வுடன் பொங்கல் விழா சிறப்பாக நடைபெறவுள்ளதால்,  தமிழர் கலாசார உடையுடன் கலந்து சிறப்பிக்குமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கிறது கல்முனை தமிழ் இளைஞர் சேனை.

By admin