கல்முனை 12 ஆம் தேர்தல் வட்டார த.தே.கூட்டமைப்பின் வேட்பாளர்  காரியாலயம்  திறந்து வைப்பு!

கல்முனை மாநகரசபைத் தேர்தலில் 12 ஆம் தேர்தல் வட்டாரத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிடும் வேட்பாளர் சிவலிங்கத்தின் தேர்தல் காரியாலயம் திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது..

வேட்பாளர் க.சிவலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில்,

அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் இராஜேஸ்வரன், முன்னாள் கல்முனை மாநகரசபையின் எதிர்கட்சித்தலைவர் ஏகாம்பரம், கல்முனை 12 ஆம் வட்டாரத்தில் போட்டியிடும்  வேட்பாளர் ராஜன், கல்முனை 11 ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் கென்றி மகேந்திரன், பாண்டிருப்பு 10 ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் செல்வநாயம்,  முன்னாள் கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஜெயக்குமார்மற்றும்  பொதுமக்கள் ஆதரவாளர்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டனர்.

இரட்டை அங்கத்தவர் வட்டாரமாகிய கல்முனை 12இல் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் க.சிவலிங்கம், ச.ராஜன் ஆகிய இருவேட்பாளர்கள் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

By admin