தொடர் சூறாவளிகள், உயரும் கடல் மட்டம்… இதுதான் காரணமா?

கடந்த ஆண்டு சூறாவளிகளின் ஆண்டு என்றே சொல்லலாம்.

2017ஆம் ஆண்டு மட்டும் 17 சூறாவளிகள் பூமியைத் தாக்கின. அதில் 10 சூறாவளிகளும், 6 மிக மோசமான சூறாவளிகளும் அடங்கும். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், 10 சூறாவளிகள் தொடர்ந்து தாக்கின. இதற்கு முன்பு இதுபோல 1893ஆம் ஆண்டுதான் நிகழ்ந்தது.

தொடர் சூறாவளிகள்

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஹார்வி சூறாவளி அமெரிக்காவை தாக்கியது. இதன் காரணமாக மோசமான விளைவுகளை அந்த நாடு சந்தித்தது. ஹார்வி கொண்டு வந்த மழையின் அளவு மட்டும் 1,539 மி.மீ. ஹுஸ்டன் மற்றும் டெக்சாஸ் மாகாணங்கள் சந்தித்த மொத்த இழப்பு மட்டும் 200 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

செப்டம்பர் மாதம் கரீபியன் பகுதிகள் இர்மா சூறாவளியால் தாக்கப்பட்டன. இதுதான் அட்லாண்டிக் சூறாவளிகளிலேயே இரண்டாவது பெரிய சூறாவளி. மணிக்கு 297 கிலோமீட்டர் வேகத்திற்கு காற்று வீசியது. அதுவும் 37 மணி நேரத்திற்கு அந்த சூறாவளி நீடித்தது. இதற்கு முன் உலகின் எந்த பகுதியிலும் இதுபோல சூறாவளி நீடித்தது இல்லை.

கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்கு முன்பே அடுத்த புயல் தாக்கியது. இது வகை-5 புயல். அதாவது மணிக்கு 252 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் காற்று வீசும். மரியா என்று பெயரிடப்பட்ட இந்த புயலின்போது காற்று மணிக்கு 281 கிலோமீட்டர் வேகத்திற்கு வீசியது.

1980ஆம் ஆண்டு ஏலன் சூறாவளி அமெரிக்காவை தாக்கியது. அப்போது மணிக்கு 305 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. அந்த அளவுக்கு மோசமாக 2017 இல்லை என்று வேண்டுமானால் சமாதானம் அடைந்துக் கொள்ளலாம்.

2005ஆம் ஆண்டு 7 மோசமான சூறாவளிகள் உட்பட 28 பெயரிடப்பட்ட புயல்கள் தாக்கின. இந்த எண்ணிக்கையில் 2017ல் புயல் வீசவில்லை என்று வேண்டுமானால் நம்மை நாம் சமாதானப்படுத்திக் கொள்ளலாம்.

ஆனால் 2017ஆம் ஆண்டு வீசிய சூறாவளிகள் ஏற்படுத்திய பொருளாதார சேதம் அதிகம். ஆம், 385 பில்லியன் டாலர்களுக்கு அது சேதத்தை உண்டாக்கி உள்ளது. 2005ல் அதிக எண்ணிக்கையில் சூறாவளி வீசி இருந்தாலும், அந்தாண்டு ஏற்பட்ட சேத மதிப்பு 144 பில்லியன் டாலர்கள்தான். இந்த வகையில் கடந்த ஆண்டு மோசமான ஆண்டுதான்.

ஏன் இவ்வாறு சூறாவளிகள் தொடர்ந்து தாக்குகின்றன? பருவநிலை மாற்றத்திற்கும் இதற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? சரி வாருங்கள். தரவுகளை கொஞ்சம் பார்ப்போம்.

சுடும் கடல்… வீசும் காற்று

வெப்பமான கடற்பரப்பிலிருந்து சூறாவளிகள் சக்தி பெறுகின்றன. கடந்த நூறு ஆண்டுகளில் கடல் வெப்ப அளவு ஒரு டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது.

அப்படியானால் ஆண்டுக்கு ஆண்டு சூறாவளியின் எண்ணிக்கையும், காற்று வீசும் வேகமும் உயர வேண்டும் தானே? ஆனால், தரவுகள் அப்படியாக இல்லை. சில ஆண்டுகள் அதிக எண்ணிக்கையில் சூறாவளி தாக்கி இருக்கின்றன. சில ஆண்டுகள் சூறாவளிகள் தாக்கவில்லை.

எதனால் இப்படி? கடற்பரப்பு வெப்பமடைந்தாலும், சூறாவளிகளை தடுக்கச் செய்யும் சில காரணிகளும் உண்டு. சஹாரன் தூசு மேகங்கள் சூறாவளி உண்டாகுவதை தடுக்கும்.

நம்புவதற்கு கடினமான ஒரு விஷயம் என்னவெனில், பெருங்காற்று சூறாவளிகளை விரும்பாது. ஆம் புயல் சூறாவளியாக உருவெடுப்பதை பெருங்காற்று தடுக்கும்.

எல் நினோவின்போது, பூமத்திய ரேகை அருகே இருக்கும் பசிஃபிக் பெருங்கடலில் வழக்கத்தைவிட அதிகமாக வெப்பமடையும். இது காற்று வீசும் போக்கில் ஆதிக்கம் செலுத்தும். அதாவது, எல் நினோ வருடங்களில் சூறாவளி வீசாது.

ஆனால், பசிஃபிக் பெருங்கடல் குளிர்ச்சியாக இருக்கும்போது அதாவது எல் நினாவின்போது, சூறாவளிகள் சுலபமாக உருவாகும். கடந்த 2017 ஆம் ஆண்டு எல் நினாவின் ஆண்டு.

உயரும் கடல் மட்டம்

பருவநிலை மாற்றம் கடல் மட்டம் உயருவதற்கும் காரணமாக அமைகிறது. வெப்பத்தால் பனிப்பாறைகள் உருகுகின்றன. உருகிய பனிப்பாறைகள் வெப்ப நீராக உருவெடுத்து கடல் மட்டத்தை உயர்த்துகிறது.- BBC NEWS