சீனக் கடலில் எண்ணெய் கசிவு; சுற்றுச்சூழல் பேரழிவு

பெய்ஜிங்: ஈரானிலிருந்து புறப்பட்ட ஓர் எண்ணெய்க் கப்பல் கிழக்கு சீனக் கடல் பகுதியில் சரக்கு கப்பல் ஒன்றுடன் மோதியதைத் தொடர்ந்து அந்த எண்ணெய்க் கப்பல் தீப்பற்றி எரியும் நிலையில் அந்தக் கப்பலிலிருந்து வெளி யாகும் எண்ணெய்க் கசிவு சுற்றுச் சூழல் பேரழிவுக்கு வழிவகுக்கும் என்று அஞ்சப்படுகிறது. அந்த எண்ணெய்க் கப்பல் இன்னமும் எரிந்து கொண்டி ருப்பதாக தகவல்கள் கூறுகின் றன. அக்கப்பலில் சென்ற 30 ஈரானியர்கள் மற்றும் பங்ளாதேஷ் நாட்டவர்கள் இருவரைத் தேடும் பணி தொடர்ந்து நடந்து வருவ தாக அதிகாரிகள் தெரிவித்துள் ளனர். தேடும் பணியில் ஈடுபட்டுள்ள மீட்புக் குழுவினருக்கு உதவ சீனா 8 கப்பல்களை அப்பகுதிக்கு அனுப்பியுள்ளது.

தென்கொரியாவும் ஒரு ஹெலி காப்டரையும் கடலோர காவல் படை கப்பல் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளது. மீட்புப் பணிகளுக்கு உதவ அமெரிக்க கடற்படையும் ராணுவ விமானம் ஒன்றை கிழக்கு சீனக் கடல் பகுதிக்கு அனுப்பி வைத் துள்ளது. விபத்துக்குள்ளான எண்ணெய்க் கப்பலிலிருந்து கடந்த இரு நாட்களாக எண்ணெய் கசிந்து கொண்டிருப்பதால் சுற்றுச் சூழல் பேரழிவு ஏற்படக்கூடும் என்று அஞ்சப்படுவதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த எண்ணெய்க் கப்பல் வெடித்து எந்த நேரத்திலும் கடலில் மூழ்கக்கூடிய ஆபத்தான நிலையில் இருப்பதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.