அமெரிக்கா அதிபர் டிரம்புக்கு மனநல பரிசோதனை அவசியமில்லை வெள்ளை மாளிகை தகவல்

அமெரிக்க ஜனாதிபதியாக இருக்கும் எல்லோருக்கும் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டியது கட்டாயமாகும். ஆனால், தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பிற்கு அப்பரிசோதனை செய்யப்படாமல் இருந்தது.

ஆனால் அமெரிக்காவின் பிரபல எழுத்தாளரான மைக்கேல் வுல்ப் எழுதிய ‘Fire and Fury: Inside the Trump’s White House’ எனும் புத்தகம், இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியானது, இதில் பலரும் டிரம்ப் மனநலம் பாதித்தவர் என்று குறிப்பிட்டு இருந்தன.இந்நிலையில், கடந்த ஒரு வாரமாகவே டிரம்பின் மனநிலை குறித்த சர்ச்சைகள் எழுந்ததைத் தொடர்ந்து, நேற்று அவருக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது.

இதன் முடிவு வரும் 12ஆம் தேதி இணையத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது. வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், டிரம்பின் உடல்நிலை நன்றாக உள்ளது, அவரின் உடலில் பெரிய அளவில் பயமுறுத்தும் வகையிலான பிரச்சினைகள் எதுவும் இல்லை, உணவு பழக்கவழக்கம் மட்டும் சற்று மோசமாக உள்ளது.அவருக்கு மனரீதியான எந்த பரிசோதனையும் நடத்தப்படவில்லை, அதற்கான அவசியமும் ஏற்படவில்லை’ என தெரிவித்துள்ளது.