சஹாரா பாலைவனத்தில் சுமார் 15 அங்குல பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது குறித்து ஆய்வாளர்கள் வியப்பு…..

உலகிலே அதிக வெப்பம் நிலவ கூடிய சஹாரா பாலைவனத்தில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது ஆய்வாளர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகிலேயே அதிக வெப்பம் நிலவக்கூடிய பாலைவனம் சஹாரா. இதன் பரப்பளவு 9,000,000 சதுர கிலோமீட்டர்களாகும் (3,500,000 சதுர மைல்கள்). இப்பரப்பானது ஏறத்தாழ ஐக்கிய அமெரிக்க நாடுகளின் அளவுக்கு பெரியதாகும். இப்பாலைவனம் மத்திய தரைக்கடல் கடற்கரையின் வளமான பகுதிகள், மக்ரேபின் அட்லஸ் மலைகள், எகிப்து மற்றும் சூடானில் உள்ள நைல் ஆற்றுப் பள்ளத்தாக்கு ஆகியவற்றில் வளமான பகுதியைத் தவிர்த்து, வட ஆப்பிரிக்காவின் பெரும்பகுதியைக் கொண்டுள்ளது

சஹாரா பாலைவனத்தின் அய்ன்செப்ஃரா மற்றும் அல்ஜீரியா ஆகிய இடங்களில் கடந்த ஞாயிற்று கிழமை முதல் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

சுமார் 15 இன்ச் உயரத்துக்கு பனிக்கட்டிகள் பாலைவனத்தை மூடியுள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் தற்போது மூன்றாவது முறை இங்கு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. ஆனால் இம்முறை அதிகளவில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

மேலும், ஐரோப்பிய பகுதியில் ஏற்பட்டுள்ள அதிக அழுத்தம் மற்றும் குளிர் காற்று இந்த பனிப்பபொழிவுக்கு காரணம் என வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இங்குள்ள சில மணற் குன்றுகள் கிட்டத்தட்ட 180மீ (590 அடி) உயரம் வரை இருக்கும். சகாரா என்னும் பெயர் பொதுவாக வழங்கினாலும், இது அரபு மொழியிற் பாலைவனம் என்னும் சொல்லாகிய சஹ்றா என்பதில் இருந்து எழுந்ததாகும்.