பாக்கிஸ்தான் மண்ணில் பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள்.பாக்கிஸ்தான் அரசுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்

பாக்கிஸ்தானில் பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை பாக்கிஸ்தான் அரசினால் மேட்கொள்ளப்பட வேண்டியது அவசியம் . அமெரிக்கா மீண்டும் வலியுத்தல்

பாக்கிஸ்தான் மண்ணில் மண்ணில் செயல்படும் பயங்கரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. அதேசமயம் , பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் இணைந்து தாங்களும் செயல்பட தயாராக இருப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க ராணுவ தலைமையமகமான பெண்டகன் செய்தி தொடர்பாளர் ராம் மன்னிங் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் இதனை தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது:- “ எங்கள் எதிர்பார்ப்பு நேரடியானது. தலீபான்கள், ஹக்கானி குழுக்கள், தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டுபவர்களுக்கு இனி பாகிஸ்தான் தனது மண்ணில் புகலிடம் அளிக்க கூடாது. தங்கள் மண்ணில் உள்ள பயங்கரவாத குழுக்களை அழிக்க, பாகிஸ்தானுக்கு குறிப்பிடத்தக்க மற்றும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை அமெரிக்கா எப்போதும் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. எந்த வேறுபாடும் இன்றி அனைத்து பயங்கரவாத குழுக்களுக்கு எதிரான நடவடிக்கையில் பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும், பாகிஸ்தானுக்கான 900 கோடி டாலர் நிதி உதவி தற்காலிமாக மட்டுமே நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவித்த மன்னிங், நிதி உதவி அளிக்கும் திட்டம் ரத்து செய்யப்படவோ அல்லது மாற்றியமைக்கப்படவோ இல்லை என விளக்கம் அளித்தார். இது ஒரு தட்காலிகமான ஒன்றே என்றும் அவர் குறிப்பிட்டார்

பாகிஸ்தான் இரட்டை வேடம் போடுவதாக அண்மையில் அறிவித்து அந்நாட்டை கடுமையாக விளாசிய டொனால்டு டிரம்ப், பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டு வந்த பல்வேறு வகையான நிதி உதவியை நிறுத்தி வைப்பதாக தெரிவித்து இருந்தார். இந்த பாகிஸ்தானுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தது. அந்த வகையில்பாகிஸ்தான்: ஹபீஸ் சயீத்தின் ‘ஜமாத்-உத்-தவா’ பயங்கரவாத இயக்கம் என பாகிஸ்தான் கடந்த வாரம் அறிவிருந்தது என்பது இங்கு குறிப்பிடப் படவேண்டிய ஓன்று.

: