ஜோயலின் குறும்படம் 2050 இந்தியாவில் நடைபெறும் சர்வதேச குறும்பட போட்டியில்  தெரிவு!

பல சிறந்த குறும்படங்களை தாயரித்து தேசிய ரீதியில் பல விருதுகளையும் பெற்று வரும் கல்முனையைச் சேர்ந்த குறும்பட தயாரிப்பாளரான  கிழக்கு பல்கலைக் கழக மாணவன் ஜோயலின் குறும்படம் 2050  இந்தியாவில் நடைபெறும சர்வதேச் குறும்பட போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

இந்தியாவில் ஏழாம் திகதி நடைபெற்ற 2வது சர்வதேச Ayuryog Film Festival இல் நூற்றுக்கணக்காண குறும்படங்கள் போட்டிக்கு உள்வாங்கப்பட்டிருந்தும். குறும்படம் 2050 இறுதி 30 குறும்படங்களுக்குள் தெரிவுசெய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

By admin