தமிழர்கள் வாக்களிக்கத்தவறினால் தாயகம் பறிபோவதை தவிர்க்கமுடியாது!
கல்முனையில் தேர்தல்காரியாலதிறப்புவிழாவில் ஹென்றிமகேந்திரன்!
                                                      காரைதீவு  நிருபர் சகா
 

கல்முனை மாநகரசபைத் தேர்தலில் குறிப்பாக 12ஆம் வட்டாரத்தில் தமிழ்மக்கள் வாக்களிக்கத்தவறினால் தமிழ்ப்பிரதிநிதித்துவம் பறிபோவது மட்டுமல்லாது பாரம்பரிய தாயகபூமியையும் இழக்கவேண்டிவரும்.

இவ்வாறு கல்முனை மாகநரசபைத்தேர்தலில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புசார்பில் போட்டியிடும் ரெலோ உபமுதல்வர் ஹென்றிமகேந்திரன் கல்முனை 12ஆம் வட்டாரத்திற்கான தேர்தல் அலுவலகத்தைத் திறந்துவைத்துப் பேசுகையில் குறிப்பிட்டார்.

இரட்டை அங்கத்தவர் வட்டாரமாகிய கல்முனை 12இல் த.தே.கூட்டமைப்பு சார்பில் சந்திரசேகரம் ராஜன் வி.சிவலிங்கம் ஆகிய இருவேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

12ஆம் வட்டாரத்திற்கான தேர்தல் அலுவலகத்திறப்பு விழா நேற்று(07) இரவு 2ஆம் பட்டியில் வேட்பாளர் கு.ஏகாம்பரம் தலைமையில் நடைபெற்றது.

அங்கு ஹென்றி மேலும் பேசுகையில்:

நாம் அனைவரும் திரண்டுவந்து வீட்டுக்கு வாக்களிக்கவேண்டும். இன்றேல் எம்மீதான தேவையற்ற திணிப்புகள் பாரபட்சங்கள் தொடரும். பிறகு உங்களுக்காக எம்மால் குரல் கொடுக்கமுடியாத துரதிஸ்டநிலை உருவாகும்.

கல்முனை மாநகரசபையில் 71வீத முஸ்லிம்களும் 29வீத தமிழ்மக்களும் வாழந்துவருகின்றனர். ஆனால் நிலப்பரப்பைப் பொறுத்தவரை தமிழ்மக்கள் 60வீத நிலபப்பரப்பிலும் முஸ்லிம்கள் 40வீத நிலப்பரப்பிலும் வாழ்ந்துவருவதை அறிவீர்கள்.

கடந்தகாலங்களில் பிரிந்துநின்று தமிழினம் பட்ட வேதனைகள் துன்பங்களை நாமறிவோம். எனவே இனியாவது உணர்ந்து நமது இருப்பைக்காப்பாற்ற சிந்தித்து செயற்படவேண்டும். என்றார்.

By admin