கல்முனை 12 ஆம் வட்டார த. தே.கூட்டமைப்பு வேட்பாளர் சிவலிங்கம் அவர்களின் தேர்தல் பரப்புரை கூட்டம்!

கல்முனை 12 ஆம் தேர்தல் வட்டாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர் சிவலிங்கம் அவர்களினால் தேர்தல் பரப்புரை கூட்டமும் மக்கள் சந்திப்பும் நேற்று கல்முனை மூன்றாம் பிரிவில் நடைபெற்றது. இதில் முன்னாள்  மாகாணசபை உறுப்பினர் இராஜேஸ்வரன் மற்றும் பொதுமக்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

முன்னாள் மாகாணசபை உறுப்பினர் முருகேசு இராஜேஸ்வரன் உரையாற்றுகையில்…..

கல்முனை என்பது பல இனத்தவர்கள் வாழ்கின்ற முக்கியமான மாநகரமாகும். இந்த மாநகரத்தில் வாழ்கின்ற தமிழர்களின் இருப்பை பாதுகாக்க வேண்டுமாயின் தமிழ் மக்கள் விரும்பியோ விரும்பாமலோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டியது தலையாய கடமையாகும் என்று முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன் குறிப்பிட்டார்.
கல்முனை மாநகர சபைக்கான தேர்தலில் கல்முனை 12 ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளரான ஓய்பெற்ற விவசாய போதனாசிரியர் க.சிவலிங்கத்தை ஆதரித்து நடாத்தப்பட்ட தேர்தல் பிரசார கருத்தரங்கில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன் அங்கு மேலும் பேசுகையில்,
உரலுக்கு ஒரு பக்கம் மட்டுமே அடி விழும் ஆனால் தவிலுக்கு இரண்டு பக்கமும் அடி விழும். அதே போன்று தவிலின் நிலையிலையே கல்முனை வாழ் தமிழர்கள் உள்ளனர். அடக்கு முறைகள், நில ஆக்கிமிப்புக்கள் இன்னும் பல விரும்மத்தகாத செயல்கள் கல்முனையில் அரங்கேற்றப்படும் தருணத்தில் தமிழ் மக்கள் ஒரு கயிற்றின் நார் போன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்துபவர்களாக இருக்க வேண்டும். இல்லையேல் நாம் எமது உரிமைகளை இழந்து தவிக்க வேண்டி ஏற்படும். இந்தத் தேர்தல் மத்திய அரசாங்கத்தின் ஆட்சியை மாற்றும் தேர்தல் அல்ல. ஆனால் தமிழ் மக்களின் எண்ணங்கள் எவ்வாறு உள்ளது என்பதை இத்தேர்தல் முடிவு ஒரு கணம் உலகிற்குச் சொல்லும்.
ஆகவே தமிழர்கள் மாற்றுக் கட்சிகளுக்கு வாக்களித்தால் கல்முனைத் தமிழர்களின் இருப்பு எதிர்காலத்தில் கேள்விக் குறியாகிவிடும் என்பதை ஒரு கணம் மனதில் கொள்வது அவசியமாகும் என்றார்.

 

By admin