கல்முனை காரைதீவு வேட்பாளர்களை ஆனந்தசங்கரி இன்று சந்தித்து கலந்துரையாடினார்!

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி இன்று (08) கல்முனை, காரைதீவு பிரதேசங்களுக்கு வருகைதந்து உள்ளுராடசிசபைத் தேர்தலில் சூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்ளை சந்தித்து கலந்துரையாடினார்.

ஏதிர்வரும் தேர்தல் தொடர்பாக முன்னெடுக்கவுள்ள தேர்தல் பிரச்சாரநடவடிக்கைகள் தொடர்பாகவும் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டு திட்டங்கள் தீட்டப்பட்டன.

தேர்தல் பரப்புரை நடவடிக்கைகளை தேர்தல் சட்டதிட்டங்களுக்கு அமைவாக மேற்கொள்ள வேண்டும் என்றும், தமிழ்த் தேசிய விடுதலை கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களையும் அழைத்து வந்து பொதுக் கூட்டங்களை நடத்துவதுதற்கான ஏற்பாடுகளை செய்வதாகவும் ஆனந்தசங்கரி அவர்கள் வேட்பாளர்களிடையே தெரிவித்தார்.

சௌவியதாசன்

By admin